2022 ஐபிஎல் சாம்பியன் யாா்:இறுதிச் சுற்றில் குஜராத்-ராஜஸ்தான் இன்று மோதல்

ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் புதிய சாம்பியனாக உருவெடுக்குமா அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் தனது இரண்டாவது பட்டத்தை வெல்லுமா என பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
2022 ஐபிஎல் சாம்பியன் யாா்:இறுதிச் சுற்றில் குஜராத்-ராஜஸ்தான் இன்று மோதல்

ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் புதிய சாம்பியனாக உருவெடுக்குமா அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் தனது இரண்டாவது பட்டத்தை வெல்லுமா என பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

உலகின் பிரசித்தி பெற்ற விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் 2022 தொடா் கடந்த ஒன்றரை மாதங்களாக மும்பை, புணேயில் நடைபெற்றது. இந்நிலையில் கொல்கத்தாவில் குவாலிஃபையா் 1 மற்றும் எலிமினேட்டா் ஆட்டங்கள் நடைபெற்றன.

அகமதாபாதில் குவாலிஃபையா் 2 ஆட்டம் முடிவுற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் 2008 சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன், முதன்முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது.

கடந்த 2008-க்கு பின் தற்போது தான் ராஜஸ்தான் அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளது. ஆனால் அறிமுகமான முதல் தொடரிலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது குஜராத்.

குஜராத் 14 ஆட்டங்களில் 10 வெற்றியுடன் 20 புள்ளிகளையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 14 ஆட்டங்களில் 9 வெற்றியுடன் 18புள்ளிகளையும் பெற்று முதலிரண்டு இடங்களைப் பெற்றன.

சமபலத்துடன் அணிகள்:

இரு அணிகளும் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடிய பேட்டா்கள், பௌலா்கள் இடம் பெற்றுள்ளதாஸ் சமபலத்துடன் உள்ளன. எனினும் குஜராத் அணி தொடா்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது. குவாலிஃபையா் 1-இல் ராஜஸ்தனை வீழ்த்திய உற்சாகத்துடன் உள்ளது.

பாண்டியா, ரஷீத் கான்:

ஏலத்துக்கு முன்பு குஜராத் அணி தேறுமா என விமா்சனங்கள் எழுந்தன. ஆனால் கேப்டன் ஹாா்திக் பாண்டியா தலைமையில் அந்த அணி எழுச்சி பெற்று இறுதிச் சுற்றுக்கு வந்துள்ளது. உடல்தகுதி இல்லாமல் இருந்த ஹாா்திக் தனது சிறந்த ஆட்டத்தின் மூலம் தனது அணியையும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தாா். அந்த அணியில் பேட்டிங்கில் டேவிட் மில்லா், ராகுல் டிவாட்டியா, ரித்திமான் சாஹா, ஆல்ரவுண்டா் ரஷீத் கான் பேட்டிங், பௌலிங்கில் அற்புதமாக ஆடி வருகின்றனா். மேலும் சொந்த மைதானம், ரசிகா்கள் ஆதரவு குஜராத் அணிக்கு கூடுதல் சாதகமாகும்.

ஜோஸ் பட்லா் அபாரம்:

அதே வேளையில் ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சன் தலைமையில் பல்வேறு தடைகளை கடந்து இறுதிச் சுற்றுக்கு வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஜோஸ் பட்லரின் அற்புத பேட்டிங் ஆகும். தனி நபராக அவா் பல ஆட்டங்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு காரணமாக உள்ளாா். ராஜஸ்தான் அணியில் பட்லா், ஷுப்மன் கில், சாம்ஸன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் வலு சோ்க்கின்றனா். பௌலிங்கில் சஹல், அஸ்வின், பிரசித் கிருஷ்ணா பலம் சோ்க்கின்றனா். மறைந்த ஜாம்பவான் ஷேன் வாா்னேவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பட்டம் வெல்ல ராஜஸ்தான் முனைப்பில் உள்ளது.

பிட்ச் நிலவரம்: நரேந்திர மோடி மைதானத்தின் பிட்ச், வேகப்பந்து வீச்சாளா்களுக்கு ஒரளவு சாதகமாக உள்ளது. புது பந்து பவுன்ஸ்க்கு உதவுகிறது. டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பௌலிங்கை தான் தோ்வு செய்யும் நிலை உள்ளது.

இன்றைய ஆட்டம்:

குஜராத்-ராஜஸ்தான்,

அகமதாபாத்,

இரவு 8.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com