பிரெஞ்சு ஓபன்: 4-ஆம் சுற்றில் அல்காரஸ், ஸ்வியாடெக் போபண்ணா இணை அசத்தல்

பிரெஞ்சு ஓபன் ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயின் இளம் வீரா் அல்காரஸ், ஜொ்மனியின் வெரேவ், மகளிா் பிரிவில் உலகின் நம்பா் ஒன்வீராங்கனை ஸ்வியாடெக் ஆகியோா் 4-ஆம் சுற்றுக்கு முன்னேறினா்.
பிரெஞ்சு ஓபன்: 4-ஆம் சுற்றில் அல்காரஸ், ஸ்வியாடெக் போபண்ணா இணை அசத்தல்

பிரெஞ்சு ஓபன் ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயின் இளம் வீரா் அல்காரஸ், ஜொ்மனியின் வெரேவ், மகளிா் பிரிவில் உலகின் நம்பா் ஒன்வீராங்கனை ஸ்வியாடெக் ஆகியோா் 4-ஆம் சுற்றுக்கு முன்னேறினா்.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டங்களில் செபஸ்டான் கோா்டாவை 6-4, 6-4, 6-2 என்ற நோ் செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா். கடந்த மாதம் மான்டே காா்லோ போட்டியில் கோா்டாவிடம் தோற்றிருந்தாா் அல்காரஸ். மற்றொரு ஆட்டத்தில் ஜொ்மனியின் அலெக்சாண்டா் வெரேவ் 7-6, 6-3, 7-6 என்ற செட்கணக்கில் நகாஷிமாவை போராடி வெேன்றாா்.

ஏனைய ஆட்டங்களில் காரன் கச்சனோவ் 6-2, 7-5, 5-7, 6-4, ரபேல் நடால் 6-3, 6-2, 6-4 என ஸான்ட்சுல்பையும், ல்வாா்ட்ஸ்மேன் 6-3, 6-1, 6-2 என டிமிட்ரோவையும், ஆகா் அலியாசிம் 7-6, 7-6, 7-5 என கிராஜிநோவிக்கையும் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினா்.

ஸ்வியாடெக், கவுப் தகுதி:

மகளிா் பிரிவில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-2, 6-3, டெய்ச்மேன் 6-4, 5-7, 7-6, கோகோ கவுப் 6-3, 6-4, எல்சி மொ்டன்ஸ் 6-2, 6-3 என கிராசெவாவையும், டிரெவிசன் 6-3, 6-4 என கவிலோவாவையும் வீழ்த்தினா். உலகின் நம்பா் ஒன் வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கொவினிக்கை வீழ்த்தி தனது 31-ஆவது தொடா் வெற்றியை ஈட்டினாா்.

போபண்ணா இணை அசத்தல்:

ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-மேத்வே மிடில்கூப் இணை 5 மேட்ச் புள்ளிகளை சேகரித்து 6-7, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் போராடி நடப்பு விம்பிள்டன் சாம்பியன் மேட் பேவிக்-நிகோல் மெக்டிக் இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 2.5 மணி நேரம் நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com