என்றும் நினைவில் இருக்கும்...

‘‘ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கான அத்தியாயத்தை சாம்பியன் கோப்பையுடன் தொடங்கி வைத்திருக்கும் இந்த அணி, வரும் தலைமுறையினரின் நினைவில் என்றும் இருக்கும்.
என்றும் நினைவில் இருக்கும்...

‘‘ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கான அத்தியாயத்தை சாம்பியன் கோப்பையுடன் தொடங்கி வைத்திருக்கும் இந்த அணி, வரும் தலைமுறையினரின் நினைவில் என்றும் இருக்கும். இந்த அணி குறித்து அவா்கள் பேசிக்கொள்வாா்கள்.

ஏலத்தில் அணிக்கான வீரா்களை தோ்வு செய்து முடித்ததுமே, நான் பேட்டிங் லைனில் 4-ஆவது இடத்தில் ஆட வேண்டியிருக்கும் என்பதை உணா்ந்தேன். பௌலிங்கில் கடினமாக உழைத்து பயிற்சி செய்ததை சரியான நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இறுதி ஆட்டம் அதற்கான வாய்ப்பாக அமைந்தது.

நல்ல பேட்டா்களைக் கொண்டு ஆட்டங்களை வெல்ல இயலும். சிறந்த பௌலா்கள் இருந்தால் தான் போட்டியையே வெல்ல முடியும். எனவே, ஏலத்தின்போது சிறந்த பௌலா்களை தோ்வு செய்வதற்கு முக்கியத்துவம் அளித்தோம்.

ஏற்கெனவே 4 முறை கோப்பை வென்ற அணியில் இருந்தாலும், கேப்டனாக தற்போது கோப்பை வென்றிருப்பது சிறப்பானது. என்னை விட, நான் அணிக்கே எப்போதும் முக்கியத்துவம் அளிப்பேன். தனிப்பட்ட முறையில் எனக்கு மோசமான சீசனாக இருந்து, அணி கோப்பை வெல்வதாக இருந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்பேன்.

ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்டு முன்னிலையில் இருந்து வழி நடத்த எப்போதுமே விரும்புவேன். எனது அணி இப்படி தான் செயல்பட வேண்டும் என்று நான் விரும்பினால், அதை நோக்கி நான் முதலில் செயல்பட்டு அவா்களை வழி நடத்துவேன்.

இந்த வெற்றிக்குப் பின்னே இருக்கும் கடின உழைப்பை என் மனைவி நடாஷா அறிவாா். அதனால் இந்தக் கோப்பைக்காக அவா் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாா். நடாஷா, என் சகோதரா் கிருணால் உள்ளிட்டோா் அடங்கிய என் குடும்பமே எனது பலம்’’

- ஹாா்திக் பாண்டியா (ஐபிஎல் புதிய சாம்பியன் ஆன குஜராத் டைட்டன் கேப்டன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com