டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே அணியை இந்தியா வீழ்த்தினால் என்ன ஆகும்?

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியில் பங்கேற்கவுள்ள 4 அணிகளில் 2 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே அணியை இந்தியா வீழ்த்தினால் என்ன ஆகும்?


டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியில் பங்கேற்கவுள்ள 4 அணிகளில் 2 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அதிக நெட் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. குரூப் 1 பிரிவில் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதனால் 7 புள்ளிகளைக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. 4 புள்ளிகளுடன் இலங்கை அணி 4-ம் இடத்தைப் பிடித்துள்ளது. 

இந்நிலையில் குரூப் 2 பிரிவில் எந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது நாளை தெரிய வரும். நாளை நடைபெறும் ஆட்டங்கள்:

நெதர்லாந்து - தென்னாப்பிரிக்கா
வங்கதேசம் - பாகிஸ்தான்
இந்தியா - ஜிம்பாப்வே

இந்திய அணி ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி விட்டால் 8 புள்ளிகளுடன் குரூப் 2 பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும். இதனால் நவம்பர் 10 அன்று அடிலெய்டில் நடைபெறவுள்ள அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக மோதும். 

இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளில் ஏதாவது ஓர் அணியாவது நாளை தோல்வியடைந்தால் தான் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற ஒரு வாய்ப்பு கிடைக்கும். நெதர்லாந்தை தென்னாப்பிரிக்கா வீழ்த்திவிட்டால் அந்த அணி 2-வது இடம் பிடிக்கும். பிறகு நவம்பர் 9 அன்று சிட்னியில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா மோதும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com