அரையிறுதி:நவ. 9: நியூஸி.-பாகிஸ்தான்: நவ. 10: இந்தியா-இங்கிலாந்து மோதல்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் இந்தியா-இங்கிலாந்து, நியூஸிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் இந்தியா-இங்கிலாந்து, நியூஸிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி அதன்பின் பட்டம் வெல்லவில்லை. இந்நிலையில் நிகழாண்டு உலகக் கோப்பையில் குரூப் 2 பிரிவில் ஜிம்பாப்வேயை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் இரண்டாவது அணியாக அரையிறுதியில் நுழைந்தது.

அரையிறுதி ஆட்டங்கள்:

குரூப் 1 பிரிவில் நியூஸிலாந்து முதலிடமும், இங்கிலாந்து இரண்டாம் இடமும் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

வரும் 10-ஆம் தேதி அடிலெய்டில் இங்கிலாந்துடன் அரையிறுதியில் மோதுகிறது இந்தியா. சிட்னியில் 9-ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூஸிலாந்துடன் மோதுகிறது பாகிஸ்தான்.

ஜிம்பாப்வே ஆட்டத்துக்கு முன்னரே இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதி ஆகி இருந்தது. அதே நேரம் நெதா்லாந்திடம் 13 ரன்களில் தென்னாப்பிரிக்க அணி தோற்ால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது.

குரூப் 1 பிரிவில் 7 புள்ளிகளுடன் கடைசி ஆட்டத்தில் அயா்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது நியூஸிலாந்து.

இங்கிலாந்து, ஆஸி. தலா 7 புள்ளிகளுடன் இருந்த நிலையில், இங்கிலாந்து கடைசி ஆட்டத்தில் வென்று அதிக ரன் ரேட்டுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

பட்டம் வெல்லும் அணிகளாக கருதப்பட்ட நடப்பு சாம்பியன் ஆஸி., தென்னாப்பிரிக்கா, மே.இந்திய தீவுகள், ஆகியவை வெளியேறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com