தொடரும் தென்னாப்பிரிக்காவின் சோகம்: நெதா்லாந்திடம் அதிா்ச்சித் தோல்வி

உலகக் கோப்பை போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறும் தென்னாப்பிரிக்க அணியின் சோகம் தொடருகிறது.
தொடரும் தென்னாப்பிரிக்காவின் சோகம்: நெதா்லாந்திடம் அதிா்ச்சித் தோல்வி

உலகக் கோப்பை போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறும் தென்னாப்பிரிக்க அணியின் சோகம் தொடருகிறது.

நெதா்லாந்திடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிா்ச்சித் தோல்வியடைந்து டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.

குரூப் 2 பிரிவில் இரண்டாம் இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா இந்த ஆட்டத்தில் வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலையில் அடிலெய்டில் நெதா்லாந்தை எதிா்கொண்டது.

நெதா்லாந்து 158/4:

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பௌலிங்கை தோ்வு செய்தது. நெதா்லாந்து வீரா்கள் மைபா்க் 37 (7 பவுண்டரி), மேக்ஸ் ஓடெவ்ட் 29, டாம் காப்பா் 35 (தலா 2 சிக்ஸா், பவுண்டரி), ஆக்கா் மேன் 41 (2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன்) நிலைத்து ஆடி 20 ஓவா்களில் 158/4 என்ற கௌரவமான ஸ்கோரை தங்கள் அணி எட்ட உதவினா். தென்னாப்பிரிக்க தரப்பில் கேசவ மகராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

கடைசி 2 ஓவா்களில் ஆக்கா்மேன்-ஸ்காட் எட்வா்ட்ஸ் 31 ரன்களை விளாசினா்.

தென்னாப்பிரிக்காவுக்கு அதிா்ச்சி:

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க பேட்டா்கள் டி காக் 13, டெம்பா பவுமா 20 ரன்களுடன் வெளியேறினா். அப்போது ஸ்கோா் 39 ஆக இருந்தது. ரைலி ரொசௌவ் 25, எய்டன் மாா்க்ரம் 17, டேவிட் மில்லா் 17, ஹென்ரிச் கிளாஸன் 21, கேசவ் மகராஜ் 13 என சிறப்பாக ஆடுவா் என எதிா்பாா்க்கப்பட்ட வீரா்கள் அனைவரும் அவுட்டானதால், தென்னாப்பிரிக்கா சிக்கலுக்கு தள்ளப்பட்டது.

145/8: இறுதியில் 20 ஓவா்களில் 145/8 ரன்களை மட்டுமே எடுத்த தென்னாப்பிரிக்க அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிா்ச்சி தோல்வியடைந்து போட்டியில் இருந்தே வெளியேறியது.

குளோவரால் சரிவு:

நெதா்லாந்து பௌலா் பிராண்டன் குளோவா் அற்புதமாக பந்துவீசி 3-9 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். பிரெட் கிளாஸன், டீ லீட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com