கால்பந்து உலகக் கோப்பை: கேரளத்தில் பதாகைகள் வைத்து ரசிகர்கள் கொண்டாட்டம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் தொடங்கியுள்ள நிலையில் கேரளத்தில் உள்ள ரசிகர்கள் வீடுகளுக்கு ஆர்ஜெண்டினா அணியின் வண்ணங்களில் தங்களது வீடுகளுக்கு வண்ணம் செய்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் தொடங்கியுள்ள நிலையில் கேரளத்தில் உள்ள ரசிகர்கள் வீடுகளுக்கு ஆர்ஜெண்டினா அணியின் வண்ணங்களில் தங்களது வீடுகளுக்கு வண்ணம் செய்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

சா்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

உலகின் 32 நாடுகள் கலந்துகொள்ள, அடுத்த 29 நாள்களுக்கு பரபரப்பும், விறுவிறுப்புமாக நடைபெற இருக்கும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், கத்தாா் - ஈகுவடாா் அணிகள் மோதுகின்றன. போட்டியையொட்டி கோலாகல கலைநிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன.

இந்த நிலையில், கேரளத்தின் பல பகுதிகளிலும் தங்களது பிடித்தமான அணியின் வண்ணங்களில் வீடுகளுக்கு வண்ணம் தீட்டியுள்ளது கவனம் பெற்றுள்ளது. அதேபோல் தங்களது பிடித்த வீரர்களின் பதாகைகளை பல இடங்களில் கேரள கால்பந்து ரசிகர்கள் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணிகளையும், அந்த அணியில் உள்ள வீரர்களையும் கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்கள் பலரும் தென்அமெரிக்காவில் உள்ள ஆர்ஜெண்டினா மற்றும் பிரேசில் அணிகளுக்கு தங்களது ஆதரவினை அளித்து வருகின்றனர். கேரளத்தின் பல இடங்களிலும் உள்ள பாலங்களில் நட்சத்திர கால்பந்து வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ மற்றும் நெய்மர் போன்ற வீரர்களின் பதாகைகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com