2ஆவது டி20: இந்தியா பேட்டிங், தொடரைக் கைப்பற்றுமா?
By DIN | Published On : 02nd October 2022 06:44 PM | Last Updated : 02nd October 2022 06:52 PM | அ+அ அ- |

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி குவஹாட்டியில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: முலாயம் சிங் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்ய உள்ளது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எளிதில் வீழ்த்தியது. அதனால் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
அதேநேரம் தனது முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய தென்னாப்பிரிக்கா இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பை இழக்காமல் இருக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.