கடைசி டி20: டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங் தேர்வு; அணியில் மூன்று மாற்றங்கள்!
By DIN | Published On : 04th October 2022 06:49 PM | Last Updated : 04th October 2022 06:52 PM | அ+அ அ- |

கோப்புப் படம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. ஏற்கனவே தொடரை இந்திய அணி 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. தற்போது இந்த போட்டியில் விராட் கோலி, ராகுல், அர்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ், மொஹமது சிராஜ், ஸ்ரேயஷ் ஐயர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணியில் டுவையின் பிரிட்டோரிஸ் நோர்க்கியாவிற்க்கு பதிலாக இடம்பெற்றுள்ளார்.