2வது ஒருநாள்: தெ.ஆ. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு! பவுமா கேப்டனில்லை!
By DIN | Published On : 09th October 2022 01:51 PM | Last Updated : 09th October 2022 01:59 PM | அ+அ அ- |

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய வந்துள்ள தெ.ஆ. அணி டி20 தொடரில் தோல்வியை த்ழுவியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியை 9 ரன்கள் வித்தியாசத்துல் வென்றது. தற்போது இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள். ருத்துராஜ், ரவி பிஸ்னோய்க்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அஹமத் களமிறங்கியுள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் பவுமாக்கு பதிலாக கேஷவ் மகாராஜா கேப்டன்சி பொறுப்பேற்றுள்ளார். இதிலும் இரண்டு மாற்றங்கள். பவுமா, ஷம்சிக்கு பதிலாக ஹென்ரிக்ஸ், போர்டியூன் விளைடாடுகின்றனர்.