உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்தியா, பாகிஸ்தானுடன் நாளை பலப்பரீட்சை

உலகக் கோப்பை டி20 தொடரில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

உலகக் கோப்பை டி20 தொடரில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது.

உலகக் கோப்பை டி20 தொடரில் சூப்பர் 12 சுற்றுக்கான தகுதி சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் சூப்பர் 12 சுற்றுகள் தொடங்குகின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. மகேந்திரசிங் தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தவரை ஐசிசி நடத்தும் போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்திக்காத இந்திய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியது. அதன்பின் அந்த ஆண்டின் உலகக் கோப்பை கனவும் தகர்ந்தது. இந்நிலையில், நாளை தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாட உள்ள இந்திய அணி கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்விக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுபவர் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அஃப்ரிடி. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய சஹீன்  ஷா அஃப்ரிடி 31 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் ரன் குவிக்க விடாமல் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு அனுப்பினார். அதன்பின் விராட் கோலியின் விக்கெட்டினையும் அவர் வீழ்த்தினார். அதனால் இந்திய அணியால் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை. இறுதியில் தோல்வியையும் தழுவியது.

இந்நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நாளை நடைபெறும் போட்டியில் மழை குறுக்கிடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் தங்களது அணிக்கு ஆதரவு அளிப்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா அல்லது பாகிஸ்தானின் ஆதிக்கம் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com