தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் வென்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.
இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம். அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக தீபக் ஹீடா விளையாட உள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியிலும் ஒரு மாற்றம். ஷம்சிக்கு பதிலாக லுங்கி இங்கிடி வந்துள்ளார்.