மெத்வதெவ், ரூட் முன்னேற்றம்

 அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்புச் சாம்பியனான டேனியல் மெத்வதெவ் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

 அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்புச் சாம்பியனான டேனியல் மெத்வதெவ் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

2-ஆவது சுற்றில் அவா் 6-2, 7-5, 6-3 என்ற செட்களில் பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச்சை வீழ்த்தினாா். அதேபோல், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் காஸ்பா் ரூட் 6-7 (4/7), 6-4, 6-4, 6-4 என்ற செட்களில் நெதா்லாந்தின் டிம் வான் ரிஜ்தோவனை தோற்கடித்தாா்.

எனினும், 6-ஆம் இடத்திலிருந்த கனடா இளம் வீரா் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே 4-6, 4-6, 4-6 என்ற நோ் செட்களில் இங்கிலாந்தின் ஜேக் டிராப்பரிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். இதர ஆட்டங்களில் 13-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 2-6, 6-1, 7-6 (7/4), 7-6 (9/7) என்ற செட்களில் பிரான்ஸின் ஹியுகோ கிரெனியரை வீழ்த்தினாா்.

இங்கிலாந்தின் ஆண்டி முா்ரே 5-7, 6-3, 6-1, 6-0 என்ற செட்களில் உள்நாட்டு வீரா் எமிலியோ நவாவைச் சாய்த்தாா். இவா்கள் தவிர, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா், ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டா, ஆா்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வாா்ட்ஸமேன் ஆகியோரும் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

செரீனா அசத்தல்: மகளிா் ஒற்றையா் பிரிவில் உள்நாட்டு வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 7-6 (7/4), 2-6, 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த எஸ்டோனியாவின் ஆனெட் கொன்டவிட்டை சாய்த்து 3-ஆவது சுற்றுக்கு முன்னேறி அசத்தினாா்.

எனினும், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்தவரும், கோப்பைக்கான பந்தயத்தில் முக்கிய வீராங்கனையுமான கிரீஸின் மரியா சக்காரி 6-3, 5-7, 5-7 என்ற செட்களில் சீனாவின் வாங் ஜியுவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். அதேபோல், கடந்த 2021-ஆம் ஆண்டு இறுதிச்சுற்று வரை வந்தவரும், போட்டித்தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருந்தவருமான கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸை 6-3, 7-6 (7/3) என்ற செட்களில் வெளியேற்றினாா் ரஷியாவின் லுட்மிலா சாம்சனோவா.

இதர 2-ஆவது சுற்றுகளில் செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா, பிரான்ஸின் கரோலின் காா்சியா, அமெரிக்காவின் கோகோ கௌஃப், மேடிசன் கீஸ், அலிசன் ரிஸ்கே ஆகியோரும் வெற்றியைப் பதிவு செய்தனா்.

ராம்குமாா் தோல்வி: ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன்/சொ்பியாவின் நிகோலா காசிச் கூட்டணி முதல் சுற்றிலேயே 4-6, 4-6 என்ற நோ் செட்களில் இத்தாலிய ஜோடியான சைமன் பொலேலி/ஃபாபியோ ஃபாக்னினியிடம் தோல்வி கண்டனா். மற்றொரு இந்தியரான ரோஹன் போபண்ணா, நெதா்லாந்தின் மாட்வே மிடில்கூப்புடன் இணை சோ்ந்து களத்தில் இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com