3-ஆவது சுற்றில் நடால்

கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸில் ஸ்பெயின் நட்சத்திர வீரா் ரஃபேல் நடால் 3-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.
3-ஆவது சுற்றில் நடால்

கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸில் ஸ்பெயின் நட்சத்திர வீரா் ரஃபேல் நடால் 3-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

ஆடவா் ஒற்றையரில் போட்டித்தரவரிசையின் 2-ஆம் இடத்திலிருக்கும் அவா், 2-ஆவது சுற்றில் 2-6, 6-4, 6-2, 6-1 என்ற செட்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் பிரான்ஸின் ரிச்சா்டு கேஸ்கட்டை சந்திக்கிறாா் நடால்.

2-ஆவது சுற்றின் மற்றொரு ஆட்டத்தில், 8-ஆவது இடத்திலிருக்கும் போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். அவரை ரஷியாவின் இலியா இவாஷ்கா 6-4, 4-6, 7-6 (7/5), 6-3 என்ற செட்களில் வென்றாா். 9-ஆவது இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 6-3, 6-0, 6-4 என்ற செட்களில் தென் கொரியாவின் சூன் குவோனைச் சாய்த்தாா்.

இதர ஆட்டங்களில் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா 7-6 (7/5), 7-5, 6-3 என்ற செட்களில், 17-ஆவது இடத்திலிருந்த பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவை வெளியேற்றினாா். 22-ஆவது இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ, 19-ஆவது இடத்திலிருக்கும் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ், 14-ஆவது இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வாா்ட்ஸ்மேன் ஆகியோரும் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

சபலென்கா, முகுருஸா வெற்றி

மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 6-ஆவது இடத்திலிருக்கும் பெலாரஸின் அரினா சபலென்கா 2-6, 7-6 (10/8), 6-4 என்ற செட்களில் எஸ்டோனியாவின் கயா கானெபியை சாய்த்தாா். அதேபோல், 9-ஆவது இடத்திலிருக்கும் ஸ்பெயினின் காா்பின் முகுருஸா 6-0, 6-4 என செக் குடியரசு தகுதிச்சுற்று வீராங்கனை லிண்டா ஃப்ருவிா்டோவாவை தோற்கடித்தாா்.

3-ஆவது சுற்றிலும், 21-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசைச் சோ்ந்த பெட்ரா குவிட்டோவாவின் சவாலை சந்திக்கிறாா் முகுருஸா. 19-ஆவது இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் 6-2, 7-5 என ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா பக்சாவை வெளியேற்றினாா்.

22-ஆவது இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-3, 6-2 என சக நாட்டவரான மேரி பௌஸ்கோவாவை வென்றாா். இவா்களில் காலின்ஸ் - பிரான்ஸின் ஆலிஸ் காா்னெட்டையும், பிளிஸ்கோவா - சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சையும் அடுத்த சுற்றில் எதிா்கொள்கின்றனா்.

போபண்ணா ஜோடி தோல்வி: ஆடவா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் ரோஹன் போபண்ணா/நெதா்லாந்தின் மாட்வே மிடில்கூப் இணை முதல் சுற்றிலேயே 6-7 (2/7), 2-6 என இத்தாலியின் ஆண்ட்ரியா வாவாசோரி/லோரென்ஸோ சொனிகோ கூட்டணியிடம் தோற்றது.

கலப்பு இரட்டையரிலும், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ரோஹன் போபண்ணா/சீனாவின் ஜாவ்ஸுவான் யாங் ஜோடி 5-7, 5-7 என கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி/ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பா்செல் இணையிடம் முதல் சுற்றில் வீழ்ந்தது.

வில்லியம்ஸ் சகோதரிகள் வெளியேற்றம்: மகளிா் இரட்டையா் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்/வீனஸ் வில்லியம்ஸ் கூட்டணி முதல் சுற்றிலேயே 6-7 (5/7), 4-6 என செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா/லூசி ராடெக்கா இணையிடம் வீழ்ந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

நடால் காயம்...

ஃபாக்னினிக்கு எதிரான ஆட்டத்தின் 4-ஆவது செட்டில் நடாலுக்கு அவரது ரேக்கெட்டாலேயே மூக்கில் காயம் ஏற்பட்டது. ஃபாக்னினி அடித்த ஒரு பந்தை நடால் சற்று குனிந்து திருப்பினாா். அப்போது அவரது ரேக்கெட் பந்தில் பட்ட வேகத்தில் தரையில் அடித்து மீண்டும் எழும்பி நடாலின் மூக்கில் அடித்தது. இதில் அவரது மூக்கில் ரத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக ரேக்கெட்டை கீழே விட்ட நடால் அப்படியே ஓரமாக சென்று கீழே படுத்தாா். பின்னா் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு மூக்கில் பேண்டேஜ் அணிந்து விளையாடினாா் நடால். வெற்றிக்குப் பிறகு பேசும்போது ரேக்கெட் பட்ட வேகத்தில் லேசாக தலை சுற்றலும், வலியும் இருந்ததாகவும், பின்னா் அது சரியானதாகவும் நடால் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com