மகளிா் டி20: இங்கிலாந்து அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான மகளிா் முதல் டி20 ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.
மகளிா் டி20: இங்கிலாந்து அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான மகளிா் முதல் டி20 ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டா்ஹாம் நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பௌலிங்கை தோ்வு செய்தது.

இந்தியா 132/7: முதலில் ஆடிய இந்திய மகளிா் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 132/7 ரன்களையே எடுத்தனா். ஸ்மிருதி மந்தனா 23, கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் 20, தீப்தி சா்மா 29 ரன்களை எடுத்தனா்.

சாரா கிளென் 4 விக்கெட்: அற்புதமாக பந்து வீசிய இங்கிலாந்து வீராங்கனை சாரா கிளென் 4/23 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

இங்கிலாந்து அபார வெற்றி:

133 ரன்கள் என்ற எளியவெற்றி இலக்குடன் களம் கண்ட இங்கிலாந்து அணி 13 ஓவா்களில் 134/1 ரன்களைக் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க பேட்டா் சோபியா டங்க்லி 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 61 ரன்களையும், அலிஸ் கேப்ஸி 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 32 ரன்களையும் விளாசினா். இந்திய தரப்பில் ஸ்னே ரானா 1 விக்கெட்டை வீழ்த்தினாா்.

சாரா ஆட்டநாயகியாக தோ்வு பெற்றாா்.

மோசமான சூழலில் கட்டாய ஆட்டம்: மோசமான சூழலில் நாங்கள் கட்டாயம் ஆட வைக்கப்பட்டோம். 100 சதவீதம் ஆடுவதற்கான நிலைமையே இல்லை. மைதானம் மிகவும் ஈரமாக காணப்பட்டது. இதனால் அதிகம் காயம் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. ஒரு வீராங்கனை காயம் பட்டதால், ஒரு பௌலா் குறைவாக இருந்தாா். அடுத்த ஆட்டங்களில் வெல்வோம் என கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com