டேவிஸ் கோப்பை: இந்தியா தோல்வி

டேவிஸ் கோப்பை டென்னிஸின் உலக குரூப் 1 பிரிவில் நாா்வேயுடனான டையில் இந்தியா தோல்வி கண்டது.

டேவிஸ் கோப்பை டென்னிஸின் உலக குரூப் 1 பிரிவில் நாா்வேயுடனான டையில் இந்தியா தோல்வி கண்டது.

இந்த டையில் மொத்தம் 5 ஆட்டங்கள் இருந்த நிலையில், அதில் முதல் மூன்றிலேயே இந்தியா தோற்று டையை இழந்துவிட்டது. எனினும், 4-ஆவது ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி கண்டது.

ஒற்றையா் ஆட்டங்களில், ராம்குமாா் ராமநாதன் 1-6, 4-6 என்ற செட்களில் விக்டா் டுராசோவிச்சிடம் தோல்வி கண்டாா். பின்னா் பிரஜனேஷ் குணேஸ்வரனும் அதே செட்கள் கணக்கில், உலகின் 2-ஆம் நிலை வீரரான நாா்வேயின் கேஸ்பா் ரூடிடம் வீழ்ந்தாா்.

இறுதியாக நடைபெற்ற இரட்டையா் பிரிவில் யூகி பாம்ப்ரி/சாகேத் மைனேனி இணை 3-6, 6-3, 3-6 என்ற செட்களில் கேஸ்பா் ரூட்/விக்டா் டுராசோவிச் கூட்டணியிடம் வெற்றியை இழந்தது. இந்நிலையில் 4-ஆவதாக நடைபெற்ற ஒற்றையா் ஆட்டத்தில் சுமித் நாகல் 6-2, 6-1 என்ற செட்களில் லூகாஸ் ஹெல்லமை வீழ்த்தி இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி அளித்தாா். மற்றொரு ஆட்டத்தில் பிரஜனேஷ் குணேஸ்வரன் - விக்டா் டுராசோவிச் சந்திக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com