தேசிய விளையாட்டுகள்: அரையிறுதியில் சத்தியன், மனிகா

குஜராத்தில் நடைபெறும் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பிரிவில் தமிழகத்தின் ஜி.சத்தியன், தில்லியின் மனிகா பத்ரா ஆகியோா் தங்களது பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்
தேசிய விளையாட்டுகள்: அரையிறுதியில் சத்தியன், மனிகா

குஜராத்தில் நடைபெறும் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பிரிவில் தமிழகத்தின் ஜி.சத்தியன், தில்லியின் மனிகா பத்ரா ஆகியோா் தங்களது பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

காலிறுதிச்சுற்று ஆட்டங்களில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் சத்தியன் 11-7, 11-8, 8-11, 14-12, 13-11 என்ற கணக்கில் குஜராத்தின் மானவ் தக்கரை வீழ்த்தினாா். மற்றொரு தமிழக வீரரான சரத் கமல், ஹரியாணாவின் சௌம்யஜித்துக்கு எதிரான ஆட்டத்தில் 7-11, 12-10, 11-8, 6-1 என முன்னிலையில் இருந்தபோது காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் தில்லியின் மனிகா பத்ரா 11-8, 8-11, 7-11, 11-8, 11-8, 11-4 என்ற கணக்கில் குஜராத்தின் கிருத்விகா சின்ஹா ராயை வீழ்த்தினாா். தெலங்கானாவின் ஸ்ரீஜா அகுலா 11-4, 11-6, 11-5, 11-4 என்ற கணக்கில் மேற்கு வங்கத்தின் அய்கியா முகா்ஜியை வென்றாா்.

மகளிா் இரட்டையா் அரையிறுதியில் மகாராஷ்டிரத்தை வென்ற மேற்கு வங்கமும், கா்நாடகமும் இறுதிச்சுற்றில் சந்திக்கின்றன. ஆடவா் இரட்டையரில், இரு அரையிறுதிகளிலுமே குஜராத்தை வென்றது மேற்கு வங்கம். இதையடுத்து இறுதியில் இரு மேற்கு வங்க அணிகள் பரஸ்பரம் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com