அஸ்வின் பாணியில் விக்கெட் எடுத்த இந்திய வீராங்கனை!
By DIN | Published On : 25th September 2022 10:36 AM | Last Updated : 25th September 2022 10:40 AM | அ+அ அ- |

மன்கட் எனும் விதிமுறையின்படி இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனை ரன் அவுட் செய்தார் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா.
இந்திய மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளிருக்கான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-0 என தொடரை கைப்பற்றியது குறிப்பிட்டத்தக்கது.
பந்து வீசுவதற்கு எதி முனையில் இருந்த இங்கிலாந்து பேட்டர் சார்லி டீன் கிரீஸை விட்டு வெளியே சென்றதால் மனகட் முறையில் அவரை அவௌட் செய்தார் இந்தியாவின் தீப்தி சர்மா. மன்கட் முறையில் விக்கெட்டை வீழ்த்துவது ரன் அவுட்டாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என அண்மையில் விதியை ஐசிசி மாற்றியது குறிப்பிடத்தக்கது.
விதிகளில் இல்லாததை தீப்தி செய்யவில்லை என கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சமீப காலமாக இதை செய்து பிரபலமானார். அவர் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
அஸ்வினை ஏன் ட்ரெண்டிங் செய்கிறீர்கள்? இன்றிரவு மற்றொரு பந்துவீச்சு ஹீரோவைப் பற்றியது.
Here's what transpired #INDvsENG #JhulanGoswami pic.twitter.com/PtYymkvr29
—