தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20: இந்தியாவுக்கு 107 ரன்கள் இலக்கு
By DIN | Published On : 28th September 2022 08:55 PM | Last Updated : 28th September 2022 09:03 PM | அ+அ அ- |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 போட்டியில் இந்தியாவுக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது
இதில், தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி திருவனந்தபுரத்தில் கிரீன்ஃபீல்டு திடலில் இன்று தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மோசமான தொடக்கத்தையே அளித்தனர்.
தென் ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து வந்த வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமலே ஆட்டமிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து வந்த பர்னெல் (24), மஹாராஜ் (41) ரன்கள் எடுக்க அணியின் ரன் விகிதம் சற்று அதிகரித்தது. எனினும் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்களை மட்டுமே தென் ஆப்பிரிக்க அணி எடுத்தது.
இதனிடையே 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.