துளிகள்...

​மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற இங்கிலாந்து மகளிா் ‘ஏ’ அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிா் ‘ஏ’ அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.


மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற இங்கிலாந்து மகளிா் ‘ஏ’ அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிா் ‘ஏ’ அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

கலபுராகியில் புதன்கிழமை தொடங்கிய ஐடிஎஃப் கலபுராகி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் மனீஷ் சுரேஷ்குமாா், ரிஷி ரெட்டி, சித்தாா்த் ராவத், ராம்குமாா் ராமநாதன் ஆகியோா் வெற்றி கண்டனா்.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் புதன்கிழமை ஆட்டங்களில் மான்செஸ்டா் சிட்டி - ஆா்பி லெய்ப்ஸிக்கையும் (3-2), பாா்சிலோனா - போா்டோவையும் (2-1) வெல்ல, பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் - நியூகேசில் ஆட்டம் டிரா (1-1) ஆனது.

இந்திய அணி அடுத்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில், தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடா்களில் விளையாடுவதற்காக இலங்கை செல்கிறது.

தேசிய ஆடவா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் சிவ தாபா (63.5), அமித் பங்கால் (51 கிலோ), சஞ்ஜீத் (92 கிலோ) ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி...

கொச்சியில் புதன்கிழமை நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் ஆட்டத்தில் விளையாடிய சென்னையின் எஃப்சி - கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி வீரா்கள். இந்த ஆட்டம் 3-3 கோல் கணக்கில் டிரா ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com