வில்லியம்சன் சதம்; நியூஸிலாந்து - 266/8

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்து பேட்டிங் செய்து வருகிறது. 
வில்லியம்சன் சதம்; நியூஸிலாந்து - 266/8

சைலெட்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்து பேட்டிங் செய்து வருகிறது. 
அந்த அணியின் கேன் வில்லியம்சன் 104 ரன்கள் விளாசி ஸ்கோரை பலப்படுத்த, வங்கதேச பெüலிங்கில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். 
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் அன்றைய தின முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் சேர்த்திருந்தது. 
இந்நிலையில், 2-ஆவது நாளான புதன்கிழமை, முதல் பந்திலேயே ஷோரிஃபுல் இஸ்லாம் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேச இன்னிங்ஸ் 310 ரன்களுக்கே முடிந்தது. நியூஸிலாந்து தரப்பில் கேப்டன் டிம் செüதி அவர் விக்கெட்டை சாய்த்தார். 
அடுத்து நியூஸிலாந்து இன்னிங்ஸில் டாம் லேதம் 3 பவுண்டரிகளுடன் 21, டெவன் கான்வே 12, ஹென்றி நிகோலஸ் 19, டேரில் மிட்செல் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41, டாம் பிளண்டெல் 6, கிளென் ஃபிலிப்ஸ் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42, இஷ் சோதி 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 
ஒன் டவுனாக வந்து நிதானமாக ரன்கள் சேர்த்த கேன் வில்லியம்சன் 11 பவுண்டரிகளுடன் 104 ரன்களுக்கு வெளியேறினார். 
இவ்வாறாக, புதன்கிழமை முடிவில் நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்து, 44 ரன்கள் பின்தங்கியிருந்தது. கைல் ஜேமிசன் 7, கேப்டன் டிம் செüதி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். வங்கதேச பெüலிங்கில் தைஜுல் இஸ்லாம் 4, ஷோரிஃபுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ், நயீம் ஹசன், மோமினுல் ஹக் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com