ஐஎஸ்எல்: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னையின் எஃப்சி?- இன்று ஒடிஸாவுடன் மோதல்

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் வாழ்வா சாவா ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-ஒடிஸா எஃப்சி அணிகள் வியாழக்கிழமை நேரு விளையாட்டரங்கில் மோதுகின்றன.
ஐஎஸ்எல்:  பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னையின் எஃப்சி?- இன்று ஒடிஸாவுடன் மோதல்

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் வாழ்வா சாவா ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-ஒடிஸா எஃப்சி அணிகள் வியாழக்கிழமை நேரு விளையாட்டரங்கில் மோதுகின்றன.

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல் 2022-23) கால்பந்து லீக் தொடா் தற்போது பிளே ஆஃப் கட்டத்தை நெருங்கி உள்ளது. சென்னை அணி 6-ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த வாரம் பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்றது சென்னை. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் நிலவுகிறது. ஒடிஸா எஃப்சியுடன் நடைபெறும் ஆட்டத்தில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சென்னை அணிக்கு கிடைக்கும்.

சொந்த மைதானமான நேரு விளையாட்டரங்கில் சென்னையின் அணி ஆட்ட வரலாறு மோசமாக உள்ளது. 7 ஆட்டங்களில் 1-இல் தான் வென்றுள்ளது.

தொடா்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெறாத நிலையில் உள்ளது சென்னை. நட்சத்திர வீரரான பீட்டா் சிலிஸ்கோவிச் 2022 நவம்பருக்கு பின் எந்த ஆட்டத்திலும் கோலடிக்கவில்லை.

இதுதொடா்பாக சென்னை தலைமை பயிற்சியாளா் தாமஸ் பிரட்ரிக் கூறியது: கடந்த 5 ஆட்டங்களில் வெற்றிக்கு அருகே சென்றும் வாய்ப்பை இழந்தோம். எங்கள் உத்தியின்படி அனைத்தும் நடைபெற்றால், 15 புள்ளிகளை பெறலாம். முந்தைய ஆட்டங்களின் அனுபவ அடிப்படையில் இனி வரும் ஆட்டங்களில் ஆடுவோம் என்றாா்.

ஒடிஸா அணியும் கடந்த வாரம் ஏடிகே மோகன் பகானிடம் 0-2 என தோல்வி கண்டது. கடைசி 5 ஆட்டங்களில் நான்கில் தோற்றது ஒடிஸா. டீகோ மௌரிசியோ, நந்தகுமாா் சேகா் ரேனியா் பொ்ணான்டஸ் ஆகியோா் இந்த ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பா்.

இரு அணிகளும் 7 முறை ஆடியதில், தலா 2 ஆட்டங்களில் வென்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com