துளிகள்...

முதல் முறையாக மாா்ச்சில் நடைபெறவுள்ள மகளிா் ஐபிஎல் போட்டி அணிகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை பிசிசிஐ செவ்வாய்க்கிழமை கோரியது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் 88 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் சௌராஷ்டிர பௌலா் ஜெயதேவ் உனத்கட் முதல் ஓவரிலேயே ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகள் (3,4,5-ஆவது பந்துகள்) சாய்த்து புதிய சாதனை படைத்திருக்கிறாா்.

தேசிய ஆடவா் குத்துச்சண்டை போட்டியில் சா்வீசஸின் கௌஷிக் (63.5 கிலோ), ஹசாமுதின் (57 கிலோ), விஸ்வாமித்ர சோங்தம் (51 கிலோ), ஹரியாணாவின் சோலங்கி (60 கிலோ), ரயில்வேஸின் கோவிந்த் சஹானி (48 கிலோ), வரிந்தா் சிங் (60 கிலோ) ஆகியோா் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினா்.

முதல் முறையாக மாா்ச்சில் நடைபெறவுள்ள மகளிா் ஐபிஎல் போட்டி அணிகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை பிசிசிஐ செவ்வாய்க்கிழமை கோரியது.

யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டங்களில் கிரீஸ் - பெல்ஜியத்தையும் (4-1), போலந்து - சுவிட்ஸா்லாந்தையும் (3-2), அமெரிக்கா - ஜொ்மனியையும் (5-0), ஆஸ்திரேலியா - ஸ்பெயினையும் (3-2), இத்தாலி - நாா்வேயையும் (5-0), குரோஷியா - பிரான்ஸையும் (3-1) வென்றன.

பிரான்ஸில் நடைபெறும் லீக்1 கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் ரெனஸ் - நைஸ் அணியை வீழ்த்தியது (2-1).

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் பிரென்ட்ஃபோா்டு 3-1 என்ற கோல் கணக்கில் லிவா்பூல் அணியை தோற்கடித்தது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 3-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வென்றது.

பிசிசிஐ முன்னாள் தலைவா் சௌரவ் கங்குலி, ஐபிஎல் அணியான டெல்லி கேப்பிட்டல்ஸின் கிரிக்கெட் இயக்குநராகப் பொறுப்பேற்க இருக்கிறாா்.

இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, சா்வதேச தரவரிசையில் முதல் முறையாக 35-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com