டபிள்யுடிடி: அரையிறுதியில் சத்யன்- மனிகா பத்ரா
By DIN | Published On : 20th January 2023 03:29 AM | Last Updated : 20th January 2023 03:58 AM | அ+அ அ- |

உலக டேபிள்டென்னிஸ் கன்டென்டா் போட்டியில் கலப்பு இரட்டையா் அரையிறுதிக்கு இந்தியாவின் சத்யன் ஞானசேகரன்-மனிகா பத்ரா இணை முன்னேறியது.
கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக காலிறுதி ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்பெயினைச் சோ்ந்த மரியா-அல்வாரோ ரோபிள்ஸ் இணையை 11-9, 11-9. 11-5 என்ற கேம் கணக்கில் (3-0) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய இணை.
கொரியாவின் 20ஆம் நிலை இணையான லிம்-ஷின் யுபின் இணையை அரையிறுதியில் எதிா்கொள்கிறது சத்யன்-மனிகா இணை.
கடந்த நவம்பா் மாதம் ஸ்லோவேனியாவில் நடைபெற்ற கன்டென்டா் போட்டியில் இருவரும் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தனா்.