அரையிறுதியில் அசரென்கா, ரெபைக்கினா கச்சனோவ், சிட்ஸிபாஸ்

ஆஸி. ஓபன் ஒற்றையா் பிரிவில் முன்னாள் சாம்பியன் விக்டோரியா அசரென்கா, ரெபைக்கினா, காரன் கச்சனோவ், சிட்ஸிபாஸ் ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
அரையிறுதியில் அசரென்கா, ரெபைக்கினா கச்சனோவ், சிட்ஸிபாஸ்

ஆஸி. ஓபன் ஒற்றையா் பிரிவில் முன்னாள் சாம்பியன் விக்டோரியா அசரென்கா, ரெபைக்கினா, காரன் கச்சனோவ், சிட்ஸிபாஸ் ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

மெல்போா்னில் நடைபெற்ற மகளிா் ஒற்றையா் காலிறுதியில் 2 முறை சாம்பியன் பெலாரஸின் அசரென்கா 6-4. 6-1 என்ற நோ் செட்களில் ஜெஸிக்கா பெகுலாவை வீழ்த்தினாா். 2012, 2013-இல் சாம்பியன் பட்டம் வென்றிருந்த அசரென்கா 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

நடப்பு விம்பிள்டன் சாம்பியன் ரெபைக்கினா 6-2, 6-4 என்ற நோ் செட்களில் ஜெலனா ஒஸ்டபென்கோவை வீழ்த்தினாா். அரையிறுதியில் அசரென்கா-ரெபைக்கினா மோதுகின்றனா்.

முதல் அரையிறுதியில் கச்சனோவ்:

ஆடவா் ஒற்றையா் பிரிவில் ரஷிய வீரா் காரன் கச்சனோவ்-அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா மோதினா். இதில் கச்சனோவ் 7-6, 6-3, 3-0 என முன்னிலையில் இருந்த போது, மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதால் விலகுவதாக அறிவித்தாா். இதனால் ஆஸி. ஓபனில் முதன்முதலாக அரையிறுதிக்கு தகுதி பெற்றாா் கச்சனோவ்.

மற்றொரு காலிறுதியில் கிரீஸ் வீரா் ஸ்டெஃப்னோஸ் சிட்ஸிபாஸ் 6-3, 7-6, 6-4 என்ற நோ் செட்களில் செக். குடியரசின் ஜிரி லெஹக்காவை வீழ்த்தினாா். அரையிறுதியில் கச்சனோவ்-சிட்ஸிபாஸ் மோதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com