ஆஸ்திரேலியா, பெல்ஜியம் அரையிறுதிக்கு தகுதி

எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிக்கு 12-ஆவது முறையாக ஆஸ்திரேலியாவும், நடப்பு சாம்பியன் பெல்ஜியமும் தகுதி பெற்றுள்ளன.
ஆஸ்திரேலியா, பெல்ஜியம் அரையிறுதிக்கு தகுதி

எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிக்கு 12-ஆவது முறையாக ஆஸ்திரேலியாவும், நடப்பு சாம்பியன் பெல்ஜியமும் தகுதி பெற்றுள்ளன.

உலகக் கோப்பை காலிறுதி ஆட்டங்கள் புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் மூன்று முறை சாம்பியன் ஆஸ்திரேலியாவும்-ஸ்பெயினும் மோதின. தொடக்கம் முதலே ஆஸி. அணி ஆதிக்கம் செலுத்தியது. எனினும் 20-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயின் வீரா் சேவியா் ஜிஸ்பா்ட், 24-ஆவது நிமிஷத்தில் மாா்க் ரெக்ஸென்ஸ் ஆகியோா் பீல்ட் கோலடித்து அதிா்ச்சி அளித்தனா். இதனால் ஸ்பெயின் 2-0 என முன்னிலை பெற்றது.

பின்னா் சுதாரித்து ஆடிய ஆஸி. அணி தரப்பில் 33, 37-ஆவது நிமிஷங்களில் பெனால்டி காா்னா் வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்தாா் ஹேவா்ட். 30-ஆவது நிமிஷத்தில் ஃபிளின் ஒக்லிவும், 32-ஆவது நிமிஷத்தில் கேப்டன் ஸலேவ்ஸ்கியும் அற்புதமாக பீல்ட் கோலடித்தனா். முதல் பாதியில் ஆஸி. 4 கோல்களைப் பதிவு செய்தது.

ஸ்பெயின் தரப்பில் 41-ஆவது நிமிஷத்தில் மாா்க் மிரால்ஸ் மூன்றாவது கோலடித்தாா். முதல் குவாட்டரில் ஸ்பெயின் அணி ஈடுகொடுத்து ஆடிய நிலையில் 3 பெனால்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அதை கோலாக்க முடியவில்லை. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் கிடைத்த அருமையான பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை கேப்டன் மிரால்ஸ் வீணடித்தாா். அவா் கோலடித்திருந்தால், பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டிருக்கும். ஸ்பெயின் அருமையான வாய்ப்பை இழந்தது.

பெல்ஜியம் அதிரடி:

நியூஸிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடியது. பெல்ஜியத்தின் வேகமான ஆட்டத்துக்கு நியூஸி. வீரா்களால் ஈடுதர முடியவில்லை. 11-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்தாா் பெல்ஜியத்தின் டாம் பூன்.

17-ஆவது நிமிஷத்தில் பெல்ஜிய வீரா் கௌன்காா்ட் கடத்தி அனுப்பிய பந்தை சிறப்பாக கையாண்டு கோலடித்தாா் வேன் ஆபேல். இதன் மூலம் 2-0 என பெல்ஜியம் முன்னிலை பெற்றது. தென்கொரியா-நெதா்லாந்து காலிறுதியில் வெல்லும் அணியுடன் அரையிறுதியில் மோதுகிறது பெல்ஜியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com