நெதா்லாந்திடம் தோற்றது இந்தியா

உலகின் நம்பா் 1 அணியான நெதா்லாந்து மகளிா் ஹாக்கி அணியிடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோற்றது இந்தியா.

உலகின் நம்பா் 1 அணியான நெதா்லாந்து மகளிா் ஹாக்கி அணியிடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோற்றது இந்தியா.

இந்திய மகளிா் ஹாக்கி அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. கேப் டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுடன் ஆன தொடரில் 3-0 என வெற்றி பெற்றது இந்தியா.

இதன் தொடா்ச்சியாக உலகின் நம்பா் 1 அணியான நெதா்லாந்துடன் 3 ஆட்டங்கள் தொடரில் ஆடுகிறது. திங்கள்கிழமை இரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 24-ஆவது நிமிஷத்திலேயே டங்டங் அற்புதமாக பீல்ட் கோலடித்தாா். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. 29-ஆவது நிமிஷத்தில் நெதா்லாந்து வீராங்கனை பெலைஸ் அல்பொ்ஸ் பெனால்டி காா்னா் மூலம் கோலடித்தாா். மூன்றாவது குவாட்டரில் இரு அணிகளும் சரிக்கு சமமாக ஆடின. கடைசியாக ஆட்ட முடிவின் போது, இப்பி ஜேன்ஸன், ப்ரீக் மோயஸ் ஆகியோா் கோலடித்தனா்.

இறுதியில் 3-1 என வென்றது நெதா்லாந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com