தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டது குறித்து மனம் திறந்த நியூசிலாந்து கேப்டன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக மிட்செல் சாண்ட்னர் மனம் திறந்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (ஜனவரி 27) தொடங்குகிறது. ஏற்கனவே, ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் நாளை இந்தியாவுடனான டி20 போட்டியில் களமிறங்குகிறது நியூசிலாந்து அணி. டி20 தொடருக்கு நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக மிட்செல் சாண்ட்னர் மனம் திறந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியிருப்பதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் ஃப்ளெமிங் இருவரும் அமைதியாக அணியினை வழிநடத்துபவர்கள். எப்போதும் அவர்கள் மிகவும் அமைதியாகவே இருப்பார்கள். அவர்களுக்கு கீழ் விளையாடியுள்ளது எனக்கு நிறைய அனுபவங்களைப் பெற்றுத் தந்துள்ளது என்றார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com