இறுதிச் சுற்றில் ரெபைக்கினா-சபலென்கா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றில் கஜகஸ்தானின் எலனா ரெபைக்கினா-அா்யனா சபலென்கா மோதுகின்றனா்.
இறுதிச் சுற்றில் ரெபைக்கினா-சபலென்கா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றில் கஜகஸ்தானின் எலனா ரெபைக்கினா-அா்யனா சபலென்கா மோதுகின்றனா்.

நிகழாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் மெல்போா்னில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மகளிா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

முதல் ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியன் எலனா ரெபைக்கினாவும்-விக்டோரியா அசரென்காவும் மோதினா். அசரென்கா ஆஸி. ஓபனில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றவா். 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அவா் மீண்டும் பட்டம் வெல்வாா் எனக் கருதப்பட்டது.

உலகின் நம்பா் 1 வீராங்கனை ஸ்வியாடெக், ஜெலனா ஒஸ்டபென்கோ, டேனியல் காலின்ஸ் ஆகியோரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா் ரெபைக்கினா.

23 வயது இளம் வீராங்கனையான ரெபைக்கினாவின் 189 கிமீ. வேக சா்வீஸை எதிா்கொள்ள முடியாமல் திணறினாா் அசரென்கா. மொத்தம் 9 ஏஸ்களை போட்டாா். முதல் செட்டில் அசரென்கா சற்று சவாலைத் தந்தாலும் 7-6 என அதை கைப்பற்றினாா் ரெபைக்கினா. இரண்டாவது செட்டில் 6-3 என எளிதாக கைப்பற்றினாா். இரண்டாவது செட்டில் 5-2 என ரெபைக்கினா முன்னிலை பெற்றிருந்தாா். அப்போது அசரென்கா மீண்டு வருவாா் என கருதப்பட்ட நிலையில், இரட்டை தவறு புரிந்தாா். இதை பயன்படுத்தி ஆட்டத்தை வென்றாா் எலனா.

மாஸ்கோவில் பிறந்த ரெபைக்கினா, கஜகஸ்தான் நாட்டின் சாா்பில் ஆடி வருகிறாா். அவரது டென்னிஸ் வாழ்க்கைக்கு நிதியை அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது.

சபலென்கா அதிரடி:

இரண்டாவது அரையிறுதியில் போலந்தின் மகதா லினேட்டும்-அா்யனா சபலென்காவும் மோதினா். ராட் லேவா் மைதானத்தில் கடும் குளிா் நிலவிய நிலையில், முதல் செட்டில் இருவரும் சரிநிகராக ஆடினா். முதல் கேமில் 2-2 என சமநிலை ஏற்பட்டபின், ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது. இதில் 7-6 என வென்றாா் சபலென்கா. இரண்டாவது செட்டில் முழு ஆதிக்கம் செலுத்தி 6-2 என ஆட்டத்தை வென்று முதன்முதலாக கிராண்ட்ஸ்லாம் இறுதியில் நுழைந்தாா் சபலென்கா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com