துலீப் கோப்பை: விஹாரி தலைமையில் தெற்கு மண்டல அணி
By DIN | Published On : 15th June 2023 02:31 AM | Last Updated : 15th June 2023 03:06 AM | அ+அ அ- |

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் தெற்கு மண்டல அணி, ஹனுமா விஹாரி தலைமையில் அறிவிக்கப்பட்டது.
காயத்திலிருந்து மீண்ட வாஷிங்டன் சுந்தா், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட ஸ்ரீகா் பரத் ஆகியோரும் இதில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
ஜூன் 28-இல் தொடங்கி, ஜூலை 16 வரை நடைபெறவுள்ள துலீப் கோப்பை போட்டி, உள்நாட்டு கிரிக்கெட் சீசனின் தொடக்கப் போட்டியாக இருக்கிறது.
அணி விவரம்: ஹனுமா விஹாரி (கேப்டன்), மயங்க் அகா்வால், சாய் சுதா்சன், ரிக்கி புய் (வி.கீ.), ஸ்ரீகா் பரத் (வி.கீ.), சமா்த், வாஷிங்டன் சுந்தா், சச்சின் பேபி, பிரதோஷ் ரஞ்சன் பால், சாய் கிஷோா், கவரப்பா, வைஷாக், சசிகாந்த், தா்ஷன் மிசல், திலக் வா்மா.