உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிந்து இந்திய அணியின் கே.எல்.ராகுல் விலகியுள்ளார். 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிந்து இந்திய அணியின் கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.

தொடைப்பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் அவரது மருத்துவக் குழுவின் அறிவுரையின்படி அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்த வாரத்தின் தொடக்கத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடிய அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அவர் அணியில் இருந்து விலகினார். அவர் எப்போது மீண்டும் அணிக்குத் திரும்புவர் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்தப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் க்ருணால் பாண்டியா தலைமையில் களமிறங்கியது.

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது இந்திய அணியில் காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் உள்ளனர். அந்த வரிசையில் கே.எல்.ராகுலும் இணைந்துள்ளார்.

இது குறித்து கே.எல்.ராகுல் கூறியிருப்பதாவது: அடுத்த மாதம் ஓவலில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் என்னால் விளையாட முடியாது. நான் நலமடைந்து அணிக்குத் திரும்பியவுடன் எனது நாட்டுக்கு உதவும் விதமாக விளையாடுவேன். அதுதான் எனது முக்கிய நோக்கம். நாட்டுக்காக நன்றாக விளையாடுவதிலேயே நான் கவனம் செலுத்தி வருகிறேன். நான் குணமடைந்து மீண்டு வர வேண்டும். எனது மருத்துவக் குழுவின் அறிவுரையின்படி செயல்பட்டு வருகிறேன். அணியின் கேப்டனாக லக்னௌ அணியுடன் முக்கியமான நேரத்தில் இல்லாதது வருத்தமளிக்கிறது. ஆனால், லக்னௌ அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் அனைத்துப் போட்டிகளின் போதும் உங்களை உற்சாகப்படுத்திக் கொண்டு இருப்பேன். காயத்திலிருந்து மீண்டு வருவேன். உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி என்றார்.

ஆர்சிபி அணிக்கு எதிரானப் போட்டியில் பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுக்க முயற்சி செய்தபோது கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com