பிரக்ஞானந்தாவுக்கு பள்ளியில் உற்சாக வரவேற்பு!
By DIN | Published On : 11th September 2023 08:54 PM | Last Updated : 11th September 2023 08:54 PM | அ+அ அ- |

உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு அவரின் பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியரும், தமிழருமான ஆா். பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றாா்
உலகக் கோப்பை செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிச்சுற்று வரை வந்த முதல் இந்தியா்., உலகக் கோப்பை செஸ் போட்டி வரலாற்றில் இறுதிச்சுற்றுக்கு வந்த இளம் போட்டியாளா் (18) என்ற பெருமைகளை பிரக்ஞானந்தா பெற்றுள்ளாா்.
இந்நிலையில், சர்வதேச போட்டிகளை முடித்துக்கொண்டு பள்ளி சென்ற பிக்ஞானந்தாவுக்கு இன்று (செப்.11) பள்ளி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குதிரை வண்டி ஏற்பாடு செய்யப்பட்டு அதில், அவரின் தாயை அமரவைத்து பிரக்ஞானந்தா ஓட்டி வந்தார். பின்னர் பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டு பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். இது தொடர்பான விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...