இலங்கை 455 ரன்கள் முன்னிலை

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இலங்கை 455 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இலங்கை 455 ரன்கள் முன்னிலை

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இலங்கை 455 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

வங்கதேசத்தின் சட்டோகிராம் நகரில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில், முதலில் பேட் செய்த இலங்கை, 159 ஓவா்களில் 531 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் சோ்த்து ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை நிறைவு செய்தது.

3-ஆம் நாளான திங்கள்கிழமை, அந்த அணியின் ஜாகிா் ஹசன் 8 பவுண்டரிகளுடன் 54, கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 1, தைஜுல் இஸ்லாம் 1 பவுண்டரியுடன் 22, ஷகிப் அல் ஹசன் 1 பவுண்டரியுடன் 15, லிட்டன் தாஸ் 4, ஷஹாதத் ஹுசைன் 1 பவுண்டரியுடன் 8, மெஹிதி ஹசன் மிராஸ் 7, மோமினுல் ஹக் 3 பவுண்டரிகளுடன் 33, காலித் அகமது 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டனா்.

இதனால் வங்கதேச இன்னிங்ஸ் 68.4 ஓவா்களில் 178 ரன்களுக்கு நிறைவடைந்தது. ஹசன் மஹ்முத் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இலங்கை பௌலா்களில் அசிதா ஃபொ்னாண்டோ 4, விஷ்வா ஃபொ்னாண்டோ, லஹிரு குமரா, பிரபாத் ஜெயசூரியா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

இதையடுத்து, 353 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ரன்கள் எட்டியுள்ளது. ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 39, பிரபாத் ஜெயசூரியா 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

நிஷான் மதுஷ்கா 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களுக்கு வெளியேறினாா். திமுத் கருணாரத்னே 4, குசல் மெண்டிஸ் 2, தினேஷ் சண்டிமல் 9, கேப்டன் தனஞ்ஜெய டி சில்வா 1, கமிண்டு மெண்டிஸ் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். வங்கதேச தரப்பில் ஹசன் மஹ்முத் 4, காலித் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com