வெற்றியின் விளிம்பில் இலங்கை

வெற்றியின் விளிம்பில் இலங்கை

சட்டோகிராம்: இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் 511 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடி வரும் வங்கதேசம், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளான புதன்கிழமை எஞ்சிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இலங்கை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் இலங்கை 531 ரன்கள் குவிக்க, வங்கதேசம் 178 ரன்களுக்கே சுருண்டது.

353 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய இலங்கை, திங்கள்கிழமை முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ரன்கள் சேர்த்திருந்தது.

4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில், ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 5 பவுண்டரிகள் உள்பட 56 ரன்களுக்கு வெளியேற, 40 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது இலங்கை. பிரபாத் ஜெயசூரியா 2 பவுண்டரிகளுடன் 28, விஷ்வா ஃபெர்னாண்டோ 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேச பெளலர்களில் ஹசன் மஹ்முத் 4, காலித் அகமது 2, ஷகிப் அல் ஹசன் 1 விக்கெட் சரித்தனர்.

இதையடுத்து, 511 ரன்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ûஸ விளையாடிவரும் வங்கதேசம், செவ்வாய்க்கிழமை முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது.

மெஹிதி ஹசன் 44, தைஜுல் இஸ்லாம் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

மஹ்முதுல் ஹசன் 3 பவுண்டரிகளுடன் 24, ஜாகிர் ஹசன் 2 பவுண்டரிகளுடன் 19, கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 2 பவுண்டரிகளுடன் 20, மோமினுல் ஹக் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50, ஷகிப் அல் ஹசன் 3 பவுண்டரிகளுடன் 36, லிட்டன் தாஸ் 4 பவுண்டரிகளுடன் 38, ஷஹாதத் ஹுசைன் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

இலங்கை தரப்பில் லஹிரு குமரா, பிரபாத் ஜெயசூரியா, கமிண்டு மெண்டிஸ் ஆகியோர் தலா 2, விஷ்வா ஃபெர்னாண்டோ 1 விக்கெட் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com