வெள்ளியாகிறது ஐஸ்வர்யாவின் ஆசிய வெண்கலம்

வெள்ளியாகிறது ஐஸ்வர்யாவின் ஆசிய வெண்கலம்

புது தில்லி: கடந்த ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தடகள வீராங்கனை ஐஸ்வர்யா மிஸ்ரா, 400 மீட்டர் ஓட்டத்தில் வென்ற வெண்கலப் பதக்கம், தற்போது வெள்ளியாக தரம் உயர்த்தப்படவுள்ளது.

பாங்காக்கில் நடைபெற்ற அந்தப் பந்தயத்தில் 2-ஆம் இடம் பிடித்த உஸ்பெகிஸ்தானின் ஃபரிதா சோலியேவா, ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்ததை அடுத்து அவரது பதக்கம் பறிக்கப்படுகிறது. இதனால், அவரது வெள்ளிப் பதக்கம் ஐஸ்வர்யாவுக்கு வழங்கப்படவுள்ளது. பந்தயத்தில் சோலியேவா 52.95 விநாடிகளிலும், ஐஸ்வர்யா 53.07 விநாடிகளிலும் இலக்கை எட்டியிருந்தனர்.

அந்தப் போட்டியில் ஐஸ்வர்யா, 4*400 மீட்டர் கலப்பு ரிலேவில் தங்கமும், அதிலேயே மகளிர் ரிலேவில் வெண்கலமும் வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போதைய தரமுயர்வை அடுத்து, அவர் அந்தப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களும் வென்றிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com