ஆசிய பாட்மின்டன்: பிரதான சுற்றில் மாளவிகா

ஆசிய பாட்மின்டன்: பிரதான சுற்றில் மாளவிகா

நிங்போ: ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் பிரதான சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் மாளவிகா முதலில் 21-18, 21-10 என்ற கேம்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நுரானி ரது அஸ்ஜாராவையும், பின்னர் 21-4, 21-5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சோஃபியா ஜகிரோவாவையும் சாய்த்தார். இதையடுத்து பிரதான சுற்றுக்கு முன்னேறியுள்ள அவர் அதில், உலகின் 50-ஆம் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் சிம் யு ஜின்னை சந்திக்கிறார்.

மகளிர் இரட்டையர் பிரிவிலும், ருதுபர்னா பாண்டா/ஸ்வேதாபர்னா பாண்டா சகோதரிகளும் பிரதான சுற்றுக்கு வந்துள்ளனர். பாண்டா சகோதரிகள் முதலில் 21-6, 21-6 என வங்கதேசத்தின் உர்மி அக்தர்/நசிமா காட்டுனை வீழ்த்த, பின்னர் 21-18, 21-16 என்ற கேம்களில் மக்காவின் வெங் சி நிக்/புய் சி வா இணையை வென்று பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றனர். முதல் சுற்றில் அவர்கள், சீனாவின் ஜாங் ஷு ஜியான்/ஜெங் யு இணையை எதிர்கொள்கின்றனர்.

இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவில் சதீஷ்குமார்/ஆத்யா வரியத், ஹரிஹரன்/ரூபன் குமார், மகளிர் இரட்டையரில் சிம்ரன் சிங்கி/ரித்திகா தாகர் ஆகியோரும் பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர். லக்ஷயா சென், சிந்து உள்ளிட்ட இந்தியாவின் பிரதான போட்டியாளர்கள் முதல் சுற்றில் புதன்கிழமை களம் காண்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com