பில்லீ ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

பில்லீ ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

சாங்ஷா: பில்லீ ஜீன் கிங் கோப்பை மகளிர் டென்னிஸ் போட்டியின் முதல் நாளில் இந்தியா 3-0 என்ற கணக்கில் பசிபிக் ஓசியானியா அணியை செவ்வாய்க்கிழமை வென்றது.

இந்த மோதலில், முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவில் ருதுஜா போசேல் 6-0, 6-0 என ஃபிஜியின் தாரனி கமோவை சாய்த்தார். அடுத்த ஆட்டத்தில், இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையான அங்கிதா ரெய்னா 6-1, 6-3 என்ற செட்களில் ஃபிஜியின் சயிர்ஸ் பரீனை தோற்கடித்தார்.

இரட்டையர் பிரிவில் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா பாமிடிபட்டி/பிரார்த்தனா தோம்ப்ரே கூட்டணி 6-1, 6-1 என்ற செட்களில் பாலினேசியாவின் மெஹெதியா பூசி/ரூபி காஃபின் இணையை வீழ்த்தியது.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் சீனாவின் சவாலை புதன்கிழமை சந்திக்கிறது.

இந்த ஆசியா/ஓசியானியா பிரிவில் தென் கொரியா, சீன தைபே, நியூஸிலாந்து அணிகளும் உள்ளன.

இப்பிரிவில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணி "பிளே-ஆஃப்' பகுதிக்கு முன்னேறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com