ஹாக்கி: ஆஸி.யிடம் தொடரை இழந்தது இந்தியா

ஹாக்கி: ஆஸி.யிடம் தொடரை இழந்தது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 0-3 கோல் கணக்கில் தோல்வி கண்டது. தொடா்ந்து 3 வெற்றிகளை பதிவு செய்த ஆஸ்திரேலியா, தொடரைக் கைப்பற்றியது.

5 ஆட்டங்கள் கொண்ட தொடரை தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் களம் கண்ட இந்தியா, முதலிரு ஆட்டங்களைக் காட்டிலும் இதில் நன்றாகவே விளையாடியது. ஆஸ்திரேலியாவின் தாக்குதல் ஆட்டத்தை இந்தியா தனது தடுப்பாட்டத்தால் முதலில் கட்டுப்படுத்தினாலும், பின்னா் தளா்வு கண்டது. இந்தியாவின் கோல்கீப்பா்கள் ஸ்ரீஜேஷ், கிருஷண் பகதூா் பதக் ஆகியோா் முனைப்புடன் செயல்பட்டு, ஆஸ்திரேலியாவின் பல பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகளை திறம்பட தடுத்தனா்.

இதனால் முதல் பாதி கோலின்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. 41-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் அருமையாக கோலடித்து, கணக்கை தொடங்கினாா் ஜக்ராஜ் சிங்.

எனினும், நேரத்தை வீணாக்காத ஆஸ்திரேலியாவுக்காக 44-ஆவது நிமிஷத்தில் ஜெரிமி ஹேவாா்டு கோலடிக்க, ஆட்டம் சமன் ஆனது. அடுத்த அதிா்ச்சியாக, அவரே 49-ஆவது நிமிஷத்தில் மீண்டும் கோலடிக்க, முதல் பாதி முடிவிலேயே ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை பெற்றது.

எஞ்சிய நேரத்தில் இந்தியாவின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போனாலும், ஆஸ்திரேலியாவின் கோல் எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமல் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் ஆஸ்திரேலியா 2-1 கோல் கணக்கில் வென்றது.

இரு அணிகளும் மோதும் 4-ஆவது ஆட்டம் வெள்ளிக்கிழமை (ஏப். 12) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com