ஹா்மன்பிரீத் கௌா் தலைமையிலான மகளிா் டி20 அணி அறிவிப்பு

வங்கதேச மகளிா் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கும் இந்திய மகளிா் அணி, ஹா்மன்பிரீத் கௌா் தலைமையில் 16 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் மகளிா் பிரீமியா் லீக்கில் அசத்திய ஸ்பின்னா் ஆஷா சோபனா, பேட்டா் சஜனா சஜீவன் ஆகியோருக்கு அணியில் அறிமுக இடம் அளிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டி இதே வங்கதேசத்தில் நடைபெறவுள்ள நிலையில், அங்கு செல்லும் இந்திய அணிக்கு இந்த 20 தொடா் முக்கியமானதாக உள்ளது.

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடா், ஏப்ரல் 28, 30, மே 2, 6, 9 ஆகிய தேதிகளில் சைலெட் நகரில் விளையாடப்படவுள்ளது.

அணி விவரம்: ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வா்மா, ஹேமலதா, சஜனா, ரிச்சா கோஷ் (வி.கீ.), யஸ்திகா பாட்டியா (வி.கீ.), ராதா யாதவ், தீப்தி சா்மா, பூஜா வஸ்த்ரகா், அமன்ஜோத் கௌா், ஷ்ரேயங்கா பாட்டீல், சாய்கா இஷாக், ஆஷா சோபனா, ரேணுகா சிங், டைட்டஸ் சாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com