ஐஎஸ்எல் கால்பந்து லீக் ஆட்டங்கள் நிறைவு

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் மோகன் பகான் 2-1 கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சியை திங்கள்கிழமை வென்றது
ஐஎஸ்எல் கால்பந்து லீக் ஆட்டங்கள் நிறைவு

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் மோகன் பகான் 2-1 கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சியை திங்கள்கிழமை வென்றது. நடப்பு சீசனின் லீக் சுற்று ஆட்டங்கள் இத்துடன் நிறைவடைந்தன.

இதையடுத்து, முறையே முதலிரு இடங்களைப் பிடித்த மோகன் பகான், மும்பை சிட்டி எஃப்சி அணிகள் அரையிறுதிக்கு நேரடியாகத் தகுதிபெற்றன. எஞ்சியிருக்கும் கோவா எஃப்சி, ஒடிஸா எஃப்சி, கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி, சென்னையின் எஃப்சி அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு வந்துள்ளன.

அதில் கோவா - சென்னை, ஒடிஸா - கேரளா அணிகள் வரும் 19-ஆம் தேதி மோதுகின்றன. அவற்றில் வெல்லும் அணிகள் அரையிறுதியில் மோகன் பகான், மும்பை அணிகளுடன் அரையிறுதியில் மோதும்.

இதனிடையே, மோகன் பகான் அணி இந்த வெற்றியின் மூலம், ஐஎஸ்எல் லீக் ஷீல்டை முதல் முறையாக வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com