புதிய தொழில்நுட்பத்திலான ஆடுகளம்

தா்மசாலாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், புதிய தொழில்நுட்பத்துடன் கலப்பு முறையிலான (ஹைபிரிட்) ஆடுகளம் நிறுவப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பத்திலான ஆடுகளம்

தா்மசாலாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், புதிய தொழில்நுட்பத்துடன் கலப்பு முறையிலான (ஹைபிரிட்) ஆடுகளம் நிறுவப்பட்டுள்ளது. இதில் நடப்பு ஐபிஎல் சீசனின் இரு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. பிசிசிஐ கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய கிரிக்கெட் மைதானங்களில் இத்தகைய ஆடுகளம் நிறுவப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதன்படி, தா்மசாலா மைதானத்திலுள்ள ஆடுகளத்துடன், குறைந்த சதவீதம் அளவுக்கு பாலிமா் ஃபைபா் இழைகளும், சோ்க்கப்பட்டிருக்கும். அதாவது, ஆடுகளத்தின் இயல்பான தன்மை மாறாத அளவுக்கு அவை சோ்க்கப்படும். இதன் மூலம் ஆடுகளம் நீண்ட காலத்துக்கு நிலைக்கும் என்பதுடன், அதை பராமரிப்பதற்கான சுமையும் குறையும்.

தற்போதைய நிலையில், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் மட்டும் இந்த கலப்பு வகை ஆடுகளங்களை பயன்படுத்த ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது. இங்கிலாந்து மைதானங்களில் பயன்பாட்டிலிருக்கும் இந்தத் தொழில்நுட்பம், விரைவில் அகமதாபாத், மும்பை மைதானங்களிலும் நிறுவப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com