துடுப்புப் படகுப் போட்டி: பல்ராஜ் பன்வார் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி

பாரிஸ் ஒலிம்பிக் துடுப்புப் படகுப் போட்டிக்கு தகுதி பெற்றார் பல்ராஜ் பன்வார்
துடுப்புப் படகுப் போட்டி: பல்ராஜ் பன்வார் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி

பாரிஸ் ஒலிம்பிக் துடுப்புப் படகுப் போட்டிக்கு தகுதி பெற்றார் பல்ராஜ் பன்வார். ஜூலை 26-ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில், ஒலிம்பிக் போட்டி துவக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தென்கொரியாவின் சன்ங்ஜுவில் இன்று(ஏப். 21) நடைபெற்ற உலக ஆசிய சமுத்திர ஒலிம்பிக் தகுதிச் சுற்று துடுப்புப் படகுப் போட்டியில் இந்தியாவின் பல்ராஜ் பன்வார் 3-வது இடம் பிடித்தார். அவர் பந்தய தூரமான 2000 மீட்டரை 7:01.27 நிமிடங்களில் கடந்து அசத்தினார்.இதன்மூலம், ஒலிம்பிக்கில் துடுப்புப் படகுப் போட்டிக்கான தனக்கான இடத்தை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

25 வயதான பல்ராஜ் பன்வார் கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் முதன்முறையாக களம்கண்டு 4-வது இடம் பிடித்து அசத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com