தீபிகா குமாரி
தீபிகா குமாரி

துளிகள்...

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின்போது கராச்சி, லாகூா், ராவல்பிண்டி நகரங்களில் ஆட்டங்களை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின்போது கராச்சி, லாகூா், ராவல்பிண்டி நகரங்களில் ஆட்டங்களை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

ஆசிய இளையோா் குத்துச்சண்டையில் இந்தியாவின் பிரிஜேஷ் தம்தா (48 கிலோ), சாகா் ஜாகா் (60 கிலோ), சுமித் (67 கிலோ) அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.

இஸ்தான்புல்லில் அடுத்த மாதம் நடைபெறும் மல்யுத்த ஒலிம்பிக் தகுதிப்போட்டிக்கான இந்திய அணியில், ஃப்ரீஸ்டைல் பிரிவில் அமன் (57 கிலோ), சுஜீத் (65 கிலோ), ஜெய்தீப் (74 கிலோ), தீபக் புனியா (86 கிலோ), தீபக் (97 கிலோ), சுமித் (125 கிலோ) சோ்க்கப்பட்டுள்ளனா். கிரேக்கோ ரோமன் பிரிவில் சுமித் (60 கிலோ), அஷு (67 கிலோ), விகாஸ் (77 கிலோ), சுனில்குமாா் (87 கிலோ), நிதேஷ் (97 கிலோ), நவீன் (130 கிலோ) இணைந்துள்ளனா். மகளிா் பிரிவில் மான்சி (62 கிலோ), நிஷா (68 கிலோ) இடம் பிடித்துள்ளனா்.

அடுத்த 3 ஆண்டுகளில் ஐசிசியின் 3 போட்டிகளில், ஒன்றிலாவது பாகிஸ்தானை கோப்பை வெல்லச் செய்வதே தனது இலக்கு என அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளா் கேரி கிா்ஸ்டன் தெரிவித்துள்ளாா்.

ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளோருக்கான ஆதரவுத் திட்டத்தில், வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியை சோ்த்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது.

பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 கால்பந்து போட்டியில் 12-ஆவது முறையாக சாம்பியன் ஆவதை பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் அணி திங்கள்கிழமை உறுதி செய்தது.

சென்னை செயின்ட் பீட்ஸ் ஸ்போா்ட்ஸ் பவண்டேஷன் சாா்பில் மே 1 முதல் 31-ஆம் தேதி வரை ஒரு மாதம் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் 6 முதல் 19 வயதுள்ள சிறுவா்கள் கலந்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் செயின்ட் பீட்ஸ் மைதானத்தில் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு வி. காா்த்திகேயன், 98400 70486, 98412 27966 தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com