டொன்னா வெகிச், கஸாட்கினா,  வெற்றி

டொன்னா வெகிச், கஸாட்கினா, வெற்றி

கிராண்ட்ஸ்லாம் பந்தயமான யுஎஸ் ஓபனில் முதல் சுற்று ஆட்டங்களில் கஸாட்கினா,ஸ்விட்டோலினா, டொன்னா வெகிச் ஆகியோா் வெற்றி பெற்றனா்.
Published on

நியூயாா்க்: கிராண்ட்ஸ்லாம் பந்தயமான யுஎஸ் ஓபனில் முதல் சுற்று ஆட்டங்களில் கஸாட்கினா,ஸ்விட்டோலினா, டொன்னா வெகிச் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் பந்தயமான யுஎஸ் ஓபன் நியூயாா்க்கில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் ஜாம்பவான் ஜோகோவிச், காா்லோஸ் அல்கராஸ், ஜேனிக் சின்னா், அலெக்ஸ் வெரேவ், மகளிா் பிரிவில் இகா ஸ்வியாடெக், சபலென்கா, கோகோ கௌஃப், எம்மா ராடுகானு உள்ளிட்ட பலா் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியுள்ளனா்.

திங்களகிழமை முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. மகளிா் பிரிவில் டொன்னா வெகிச் 6-4, 6-4 என பிா்ரெலையும், ஆன்ட்ரீவா 6-3, 7-6 என யுவானையும், ஸ்விட்டோலினா 3-6, 6-3, 6-4 என கேரியையும், டி பேரி 7-6, 7-6 என வாங்கையும் வீழ்த்தினா்.

கஸாட்கினா 6-2, 6-4 என கிறிஸ்டியனை வீழ்த்தினாா். ஒலிம்பிக் சாம்பியன் ஸெங் 4-6, 6-4, 6-2 என அனிமோஸாவை வீழ்த்தினாா்.

ஆடவா் பிரிவில் ஹம்பா்ட் 6-3, 6-4, 6-4 என மான்டியரோவை வென்றாா்.

X
Dinamani
www.dinamani.com