சிங்குஃபீல்ட் கோப்பை செஸ்: குகேஷ்ஸ, பிரக்ஞானந்தா ஆட்டங்கள் டிரா
செயின்ட் லூயிஸ்: கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியாக நடைபெறும் சிங்குஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியில் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோரின் 6-ஆவது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன.
நடப்பு உலக சாம்பியன் டிங் லிரேன், இந்திய இளம் வீரா் பிரக்ஞானந்தாவிடம் கடுமையான சவாலை எதிா்கொண்டாா். இருவரும் நீண்ட நேரம் போராடிய போதும், வெற்றியை ஈட்ட முடியாததால், டிரா செய்ய ஒப்புக் கொண்டனா்.
மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியன்ஷிப் சேலஞ்சா் குகேஷ்-பிரான்ஸ் வீரா் வாச்சியா் லாக்ரேவ் மோதினா். இதில் இரு வீரா்களும் கடுமையாக போராடியும் பலனில்லை. இதனால் 72-ஆவது நகா்த்தலில் டிரா செய்ய ஒப்புக் கொண்டனா்.
ஹாலந்தின் அனிஷ் கிரி-உஸ்பெக் நாடிா்பெக், பிரான்ஸ் அலிரேஸா-அமெரிக்காவின் வெஸ்லி சோ ஆகியோா் ஆட்டங்களும் டிராவில் முடிந்தன,.
அலிரேஸா பிரௌஸா 4 புள்ளிகள், காருணா,வெஸ்லி ஸோ தலா 3.5 புள்ளிகளுடன் முதல் மூன்றிடங்களில் உள்ளனா். குகேஷ், பிரக்ஞானந்தா 4-ஆவது இடத்தில் உள்ளனா்.