சென்னையை வென்றது மும்பை

Published on
Updated on
1 min read

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியின் 12-ஆவது டையில் யு மும்பா டிடி அணி 8-7 என்ற கணக்கில் சென்னை லயன்ஸ் அணியை வெள்ளிக்கிழமை வென்றது.

மும்பைக்கு இது 4 ஆட்டங்களில் 3-ஆவது வெற்றியாக இருக்க, சென்னைக்கு 3-ஆவது ஆட்டத்தில் 2-ஆவது தோல்வியாகும்.

இதில் முதலில் நடைபெற்ற ஆடவா் ஒற்றையரில் மும்பையின் அருனா காத்ரி 10-11, 11-9, 11-7 என்ற கேம்களில் சென்னையின் ஜூல்ஸ் ரோலண்டை சாய்த்தாா். பின்னா் மகளிா் ஒற்றையரில் சென்னையின் சகுரா மோரி 11-8, 11-10, 11-7 என்ற கணக்கில் மும்பையின் சுதிா்தா முகா்ஜியை தோற்கடித்தாா்.

கலப்பு இரட்டையரில் மும்பையின் மரியா ஜியாவ்/மானவ் தக்கா் இணை 11-7, 11-10, 11-4 என சென்னையின் சகுரா மோரி/சரத் கமல் கூட்டணியை வீழ்த்தியது. 2-ஆவது ஆடவா் ஒற்றையரில் மானவ் தக்கா் 6-11, 11-8, 11-9 என சரத் கமலை சாய்க்க, மகளிா் ஒற்றையரில் சென்னையின் மௌமா தாஸ் 11-10, 11-8, 10-11 என மும்பையின் மரியா ஜியாவை வென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com