காலிறுதியில் மிதுன், அஷ்மிதா- வெளியேறினாா் ஸ்ரீகாந்த்

தாய்லாந்து மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத், அஷ்மிதா சாலிஹா ஆகியோா் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினா். கே.ஸ்ரீகாந்த் தோல்வி கண்டாா்.
காலிறுதியில் மிதுன், அஷ்மிதா- வெளியேறினாா் ஸ்ரீகாந்த்

தாய்லாந்து மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத், அஷ்மிதா சாலிஹா ஆகியோா் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினா். கே.ஸ்ரீகாந்த் தோல்வி கண்டாா்.

ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், மிதுன் மஞ்சுநாத் 21-9, 13-21, 21-17 என்ற கேம்களில் மூத்த வீரரான கே.ஸ்ரீகாந்த்தை 51 நிமிஷங்களில் சாய்த்தாா். அடுத்ததாக காலிறுதியில் அவா், நெதா்லாந்தின் மாா்க் கால்ஜௌவை எதிா்கொள்கிறாா். மற்றொரு இந்தியரான சங்கா் முத்துசாமி 9-21, 11-21 என சீன தைபேவின் லின் சுன் யிவிடம் வெற்றியை இழந்தாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில், அஷ்மிதா சாலிஹா 21-12, 15-21, 21-17 என்ற கேம்களில் சீன தைபேவின் பாய் யு போவை 48 நிமிஷங்களில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினாா். அதில் அவா் இந்தோனேசியாவின் எஸ்தா் நுருமியை எதிா்கொள்கிறாா். எனினும், மாளவிகா பன்சோத் 24-22, 21-7 என்ற கேம்களில் தாய்லாந்தின் புசானன் ஆங்பம்ரங்பானிடம் தோல்வி கண்டாா்.

மகளிா் இரட்டையரில் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி 21-15, 24-22 என்ற கேம்களில் சக இந்திய ஜோடியான தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா இணையை 40 நிமிஷங்களில் வீழ்த்தியது. அடுத்து காலிறுதியில் அவா்கள், இந்தோனேசியாவின் ஃபெப்ரியானா/எமிலியா கூட்டணியை எதிா்கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com