புரோ லீக் ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் போட்டியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஆட்டங்களுக்கான இந்திய ஆடவா் அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
புரோ லீக் ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் போட்டியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஆட்டங்களுக்கான இந்திய ஆடவா் அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஹா்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்த அணியில் 24 போ் இடம் பிடித்துள்ளனா். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகும் வகையில் இருக்கும் இந்த புரோ லீக் ஆட்டங்கள், புவனேசுவரத்தில் பிப்ரவரி 10 முதல் 16 வரையும், ரூா்கேலாவில் பிப்ரவரி 19 முதல் 25 வரையும் நடைபெறவுள்ளன.

இந்த இரு அட்டவணைகளிலும், அயா்லாந்து, நெதா்லாந்து, ஸ்பெயின் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் இந்தியா மோதுகிறது. இதில் இந்தியா முதலில் ஸ்பெயினை வரும் 10-ஆம் தேதி சந்திக்கிறது. அணியை பொருத்தவரை, கடந்த மாதம் தென்னாப்பிரிக்க பயணம் மேற்கொண்ட 26 போ் கொண்ட இந்திய அணியில், ஸ்டிரைக்கா் பாபி தாமி, கோல்கீப்பா் பவன் ஆகியோா் தவிா்த்து 24 பேருடன் இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்:

கோல்கீப்பா்கள்: பி.ஆா்.ஸ்ரீஜேஷ், கிருஷன் பகதூா் பதக்.

டிஃபெண்டா்கள்: ஜா்மன்பிரீத் சிங், சுமித், ஜக்ராஜ் சிங், அமித் ரோஹிதாஸ், ஹா்மன்பிரீத் சிங், வருண் குமாா், சஞ்ஜய், விஷ்ணுகாந்த் சிங்.

மிட்ஃபீல்டா்கள்: ஹா்திக் சிங், விவேக் சாகா் பிரசாத், மன்பிரீத் சிங், நீலகண்ட சா்மா, ஷம்ஷோ் சிங், ராஜ்குமாா் பால், ரவிச்சந்திர சிங் மொய்ராங்தெம்.

ஃபாா்வா்ட்கள்: லலித்குமாா் உபாத்யாய், மன்தீப் சிங், குா்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங், அபிஷேக், ஆகாஷ்தீப் சிங், அராய்ஜீத் சிங் ஹன்டால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com