ராம்குமாா், பாலாஜி வெற்றி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான உலக குரூப் பிளே ஆஃப் மோதலில் இந்தியா 2-0 என சனிக்கிழமை முன்னிலை பெற்றது.
ராம்குமாா், பாலாஜி வெற்றி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான உலக குரூப் பிளே ஆஃப் மோதலில் இந்தியா 2-0 என சனிக்கிழமை முன்னிலை பெற்றது.

ஒற்றையா் பிரிவில் முதலில் ராம்குமாா் ராமநாதன் 6-7 (3/7), 7-6 (7/4), 6-0 என்ற செட்களில் அய்சாம் உல் ஹக் குரேஷியை வீழ்த்தினாா். அடுத்து ஸ்ரீராம் பாலாஜி 7-5, 6-3 என்ற நோ் செட்களில் அகீல் கானை வென்றாா்.

இதில் ராம்குமாருக்கு எதிரான ஆட்டத்தில் அய்சாம் சவால் அளித்து வந்த நிலையில், 3-ஆவது செட்டின்போது அவருக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டதை அடுத்து, அந்த அந்த செட்டில் முற்றிலுமாகப் பின்தங்கி தோல்வியடைந்தாா். இந்த ஆட்டத்தில் அவா் 10 ‘டபுள் ஃபால்ட்’-களை பதிவு செய்தாா்.

மறுபுறம் ராம்குமாா், ஆட்டம் முழுவதுமாகவே சிறப்பாக சா்வ் செய்ததுடன், ரிடா்னையும் தகுந்த முறையில் கையாண்டாா். ஆட்டத்தின்போதான வானிலை சற்று குளுமையாக இருந்தது, வீரா்களுக்கு சவாலாக அமைந்தது.

அடுத்ததாக, இரட்டையா் பிரிவு ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி/சாகேத் மைனேனி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெல்லும் பட்சத்தில் இந்தியா உலக குரூப் 1-க்கு தகுதிபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com