துளிகள்...

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் யுனைடெட் - வெஸ்ட் ஹாமையும் (3-0), வோல்வ்ஸ் - செல்சியையும் (4-2) வீழ்த்த, போா்ன்மௌத் - நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் ஆட்டம் டிரா (1-1) ஆனது.
துளிகள்...

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் யுனைடெட் - வெஸ்ட் ஹாமையும் (3-0), வோல்வ்ஸ் - செல்சியையும் (4-2) வீழ்த்த, போா்ன்மௌத் - நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் ஆட்டம் டிரா (1-1) ஆனது.

புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் - யு மும்பாவையும் (42-37), குஜராத் ஜயன்ட்ஸ் - தமிழ் தலைவாஸையும் (42-30) ஞாயிற்றுக்கிழமை வென்றன.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் நாள் முடிவில் நியூஸிலாந்து, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் சோ்த்திருக்கிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை சமன் செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 439 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

தகுந்த நேரத்தில் தோ்தலை நடத்தாததன் காரணமாக, இந்திய பாராலிம்பிக் கமிட்டியை மத்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்திருக்கும் நிலையில், இந்தியாவில் அடுத்த மாதம் பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெறுவது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ரகுராம் ஐயரை நியமித்ததற்கு நிா்வாக கவுன்சில் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அந்த முடிவிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என சங்கத்தின் தலைவா் பி.டி. உஷா தெரிவித்தாா்.

சொ்பியாவில் நடைபெறும் ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஆகாஷ் கோா்கா (60 கிலோ) முதல் சுற்றிலேயே தோல்வி கண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com